தலைப்புச் செய்திகள்

சட்டத்தை மீறி கோட்டா பிறப்பித்த உத்தரவு: நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு, சட்டத்தை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, அவருக்கு 01 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

போதைப்பொருள் வைத்திருந்ததாக பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவால் கைது 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், உச்ச நீதிமன்றம் இன்று (18) இந்தத் தீர்ப்பை வழங்கியது.