தலைப்புச் செய்திகள்

கனேமுல்ல சஞ்சீவ – உடலைப் பொறுப்பேற்க யாருமில்லை

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உடலைப் பொறுப்பேற்பதற்கு, அவரின் உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அவரின் உடல் கொழும்பு பொலிஸ் பிணவறையில் உள்ளது வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களை எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் பிரபல பாதாக உலகத் தலைவர், நேற்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்ட நடவடிக்கைகளுக்காக – சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் 19 கொலை வழக்குகளில் சந்தேக நபராக இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் வகை துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்பான செய்தி: நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் முஸ்லிம் இல்லை: பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்