
பாதாள உலகக் கும்பலின் தலைவன் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில், சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் – நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு சென்ற பெண் சந்தேக நபர் இஷாரா செவ்வந்தி என்வருடன் – குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பு வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், இன்னும் கைது செய்யப்படாமலுள்ள பெண் சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என கூறப்படுகிறது.
25 வயதான மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர், நீர்கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவில் பணியாற்றி வருவதாகவும், நீதிமன்றப் பணியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண் சந்தேக நபரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
மேலதிக விசாரணைகளுக்காக – கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், கொழும்பு குற்றப்பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்பான செய்தி: செவ்வந்தியை தெரிந்தால் சொல்லுங்கள்



