தலைப்புச் செய்திகள்

செவ்வந்தியை தெரிந்தால் சொல்லுங்கள்

பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவ என்பவரை கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று (19) சுட்டுக் கொன்ற பிரதான சந்தேக நபருக்கு உதவிய பெண்ணை கைது செய்வதற்கு, பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையில் தொடர்புடைய பெண் நீர்கொழும்பு கட்டுவெல்லகமவைச் சேர்ந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தேடப்படும் பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு, தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத்தன்மையைப் பேணி, பணப் பரிசை வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் முடிவு செய்துள்ளார்.

தேடப்படும் சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0718591727 அல்லது 0718591735 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாருக்கு அறிவிக்கலாம்