தலைப்புச் செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவியாக ஆரிகா காரியப்பர் தெரிவு

– எம்.என்.எம். அப்ராஸ் –

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக – சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் – அதன் தலைவர் பதவிக்கு பெண் ஒருவர் தெரிவானமை, இதுவே முதல் முறையாகும்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், 2025/26ம் ஆண்டுக்கான கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

அதில் அதிக வாக்குகளைப் பெற்று – கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார். 

இவர் கிழக்கு மாகாணத்திலேயே பிராந்திய சட்டத்தரணிகள் சங்கங்களில் – தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.