
– றிப்தி அலி –
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பெயர்ப் பட்டியலை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிராகரித்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விடயத்தை கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரினி அமரசூரிய – தன்னிடம் உறுதிப்படுத்தியதாகவும், விரைவில் புதிய விண்ணப்பம் கோருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியதாகவும் ஊடகவியலாளர் றிப்தி அலி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு நேற்று (29) புதன்கிழமை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஓகஸ்ட் 08ஆம் திகதி முதல் – தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவி வெற்றிடமாகக் காணப்படுகின்றது. இதற்காக இதனை நிரப்பும் பொருட்டு, கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் விண்ணப்பம் கோரப்பட்டு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.
இதில் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட பேராசிரியர்களான ரமீஸ் அபூபக்கர், ஏ.எம். றஸ்மி மற்றும் ஹன்சியா ரவூப் ஆகியோரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் உப வேந்தராக கடந்த ஐந்து மாதங்களாக செயற்படுட்டு வருகின்றார்.
இதையும் பாருங்கள்



