
இந்தியாவிலிருந்து 4,500 மெட்ரிக் தொன் உப்பு நளை மறுநாள் 27ஆம் திகதி இலங்கைக்கு வரும் என்று அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உப்பின் முதல் தொகுதி இது என்றும், ஜனவரி 31ஆம் திகதிக்குள் மேலதிகமாக 12,500 மெட்ரிக் தொன் உப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்ய அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய பருவமழைக் காலத்தில் உள்ளூர் உப்பளங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து – உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.



