
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை கைது செய்யப்பட்டதையடுத்து – குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
யோஷித ராஜபக்ஷ இன்று அதிகாலை பெலியத்த பகுதியில் – குற்றப் புலனாய்பு பிரிவினரால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் – இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சட்ட மா அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து, யோஷித ராஜபக்ஷவை 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள காணி வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றின் பிரதிவாதி எனும் சந்தேகத்தின் பேரிலேயே யோஷித கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர் – யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் என்பவராவார்.



