தலைப்புச் செய்திகள்

மூன்று மணிநேர தாமதத்துக்குப் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம் அமுலானது: அதற்குள் 19 பேர் பலி

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த தாமத காலத்தின் போது இஸ்ரேல் தாக்குதல்களில் குறைந்தது 19 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே – விடுவிக்கப்பட வேண்டிய மூன்று கைதிகளின் பெயர் விபரங்களைப் பெற்றதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி – சண்டை இடைநிறுத்தம் அமுலுக்கு வருகிறது. மேலும் துமல் நாளிலேயே மூன்று இஸ்ரேலிய கைதிகளும், சுமார் 90 பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தங்கள் உடைமைகளை பொதி செய்து கொண்டு தங்கள் வீடுகளில் எஞ்சியிருக்கும் இடத்திற்குத் திரும்புகின்றனர்.

15 மாதங்களாக நீடித்த போர் முடிவுக்கு வந்தமையை அடுத்து, காஸா பகுதி முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்பான செய்தி: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தில் சிக்கல்: நெதன்யாகு அறிவிப்பால் பதட்டம்

இதையும் பாருங்கள்