தலைப்புச் செய்திகள்

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆஸ். கசந்தி, அனைத்து வலயக் கல்விப் பணிப்பார்கள் மற்றும் அதிவர்களுக்கு அறிவித்துள்ளார்.

எனவே இத்தினத்திற்கான பதில்பாடசாலை நாளாக எதிர்வரும் 25.01.2025 (சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடானது கிழக்குமாகாண ஆளுநரின் அனுமதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிழக்கு பாடசாலைகளில் மூன்றாந்தவணை பரீட்சைகள் நடந்து வந்த நிலையிலேயே நாளை பாடசாலைகள் மூடப்படுகின்றன.