
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று – தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது, ஊடகவியலாளர்களிடம் பேசி நாடாளுமன்ற உறுப்பினர்; “ஓர் அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனம் தேவை. இதை மறுக்க முடியாது” என்றார்.
“அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய வாகனங்களைப் பெறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இன்றுவரை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த உத்தியோகபூர்வ வாகனங்களும் ஒதுக்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. எந்த வகையான வாகனம் என்கிற முடிவு இன்னும் எட்டப்பவில்லை. என்றாலும், வாகனங்கள் நிச்சயமாக புதியதாக இருக்கும். மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வாகனங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
இதையும் பாருங்கள்



