
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக, இன்று (13) சீனாவுக்குப் புறப்பட்டார்.
ஜனாதிபதியுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார உள்ளிட்ட குழுவினரும் பயணமாகியுள்ளனர்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் – இந்தப் பயணத்தை ஜனாதிபதி அனுர மேற்கொள்கிறார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வழக்கமான பயணிகள் விமானமான சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-232 மூலம் இன்று இரவு 8:20 மணிக்கு ஷாங்காய்க்கு ஜனாதிபதி குழுவினர் புறப்பட்டனர்.
ஜனாதிபதி தனது பயணத்தை முடித்துக்கொண்டு வெள்ளிக்கிழமை (17) திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



