தலைப்புச் செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில், நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் இடைநிறுத்தம்

பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள – நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களில் – நாடாளுமன்றத்தின் உணவு பரிமாறுதல் மற்றும் நாடாளுமன்ற பராமரிப்பு பணியாளர்களு அடங்குவர்.

சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இவர்கள் இடைநிறுத்தப்பட்டதாக, நாடாளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஓகஸ்ட் 2023 இல் பதிவாகின.

மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசல சரோஜனி வீரவர்தன தலைமையிலான குழு, உள்ளக விசாரணையினை நடத்தி, இது தொடர்பிபல் முழுமையாக ஆய்வு செய்தது.

அந்த வகையில், குறித்த விசாரணைக் குழுவின் இறுதி பரிந்துரைகள், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களை இடைநிறுத்துவதற்கு வழிவகுத்தன.