தலைப்புச் செய்திகள்

முஸ்லிம்கள் இல்லாத அனுரவின் அமைச்சரவை நியமனமானது

னாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

அதற்கிணங்க பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டவுடன் பதவியேற்பு விழா ஆரம்பமானது.

புதிய அரசாங்கத்தின் கீழ் 22 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு;

01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க – நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் அமைச்சர்
02) பிரதமர் ஹரினி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி, மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
03) விஜித ஹேரத் – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்
04) பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்
05) சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
06) சரோஜா சாவித்திரி பால்ராஜ் – பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
07) கே.டி. லால்காந்த – நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் காணி அமைச்சர்
08) அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சர்
09) ராமலிங்கம் சந்திரசேகர் – மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர்
10) பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
11) சுனில் ஹந்துநெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர்
12) ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர்
13) பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
14) பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
15) டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்
16) சமந்த வித்யரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
17) சுனில் குமார கமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
18) வசந்த சமரசிங்க – வர்த்த, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
19) பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
20) பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சர்
21) பொறியியலாளர் குமார ஜயக்கொடி – எரிசக்தி அமைச்சர்
22) கலாநிதி தம்மிக்க படபெந்தி – சுற்றாடல் அமைச்சர்

இந்த அமைச்சர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திலும், இதுபோன்றே ஆரம்பத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை.