தலைப்புச் செய்திகள்

காஸ் சிலிண்டரின் தேசியப்பட்டியலுக்கு ரவி கருணாநாயக்க நியமனம்

புதிய ஜனநாயக முன்னணயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணயின் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றுக்கு – முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

மற்ற வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிட்டனர்.