தலைப்புச் செய்திகள்

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நொவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளது.

ஆனால் முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை டிசம்பர் 14ஆம் திகதி முதல் ஜனவரி 01ஆம் திகதி வரை வழங்கப்படும்.

இருந்த போதும் க.பொ.த உயர்தர பரீட்சை நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு மட்டும், நொவம்பர் 23 முதல் ஜனவரி 01ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும்.

மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.