தலைப்புச் செய்திகள்

தேர்தல் கடமைகளில் 70 ஆயிரம் பொலிஸார்

பொதுத் தேர்தலின் போது அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சுமார் 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (12) முதல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

“நாட்டில் 13,383 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்திலும் தேர்தல் நடைபெறும் நாளிலும் அதற்கு மறுநாளிலும், தேவைப்பட்டால், அதற்குப் பிறகும் பொலிஸாரை பணியில் அமர்த்தவுள்ளோம்.

தேர்தல் பணியில் 12,227 பேர் நேரடியாகத் ஈடுபட்டுள்ள நிலையில், 3,200 சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் பணியில் உள்ளனர். மொத்தத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 70,000 போலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

“பொலிஸாருக்கு மேலதிகமாக, கிட்டத்தட்ட 11,000 ராணுவத்தினர் முக்கிய இடங்களில் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் விளக்கினார்.

சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கேட்டுக் கொண்டார்.