தலைப்புச் செய்திகள்

கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தேர்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது

கொழும்பு – கொச்சிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கொழும்பு வடக்கு குற்றப் பிரிவினர் இன்று (11) கைது செய்துள்ளனர்.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரை மேற்படி பொறுப்பதிகாரி அச்சுறுத்தியதோடு, குறிப்பிட்ட சில தேர்தல் அபேட்சகர்களின் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையில், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் குறிப்பிடப்பட்ட பிழைகளை இழைத்தமை மற்றும் தேர்தல் தொடர்பான தற்போதைய சட்டங்களை மீறியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர், மேற்படி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.