தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சரின் 19 வயது மகனின் பெயரில் Bar லைசன்ஸ்: ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் வழங்கியமை அம்பலம்

குருணாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் 19 வயது மகனின் பெயரில், ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில், மதுபான விற்பனை உரிமங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளமை தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – நிதி அமைச்சராக இருந்துகொண்டு தேர்தல் சட்டங்களையும் மீறி – மதுபான உரிமங்களை விநியோகித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் திகதி நடைபெற்ற நிலையில், அதே மாதம் 18, 19, 20 ஆகிய திகதிகளிலும் மதுபான விற்பனை உரிமங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இது தேர்தல் திணைக்கள அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குருணாகல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் 19 வயது மகனின் பெயரில் வழங்கப்பட்ட மேற்படி உரிமமானது – செப்டெம்பர் 11ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 31ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.