தலைப்புச் செய்திகள்

வேட்பு மனுவின் பின்னர் போட்டியிருந்து வாபஸ் பெறுவதாக முன்னாள் எம்.பி அஜித் அறிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதா அறிவித்துள்ளார்.

கட்சியின் கம்பஹா தொகுதிக்கான பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்து தன்னை – முன்னறிவிப்புகள் எவையும் இன்றி, நீக்கியதை அடுத்து அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முடிவு குறித்து – விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

‘இந்த முடிவால் நான் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ள அஜித் மன்னப்பெரும, தான் ஏற்கனவே தேர்தலுக்கான வேட்புமனுவைச் சமர்ப்பித்ததாகவும், ஆனால் போட்டியிலிருந்து வாபஸ் பெற முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.