தலைப்புச் செய்திகள்

பஸ் – டிப்பர் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் காயம்

ரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில், ஹிடெல்லன பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் டிப்பர் லொரி ஒன்றும் இன்று (27) நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர்; இவர்களில் ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.