தலைப்புச் செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் 72 அணிகள் வேட்புமனுத் தாக்கல்: 08 நிராகரிப்பு

– முஸ்ஸப் அஹமட் –

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் 72 அணிகள் வேட்புமனுக்களை இன்று (11) தாக்கல் செய்திருந்தன.

அவற்றில் 22 அரசியல் கட்சிகளும், 50 சுயேட்சைக் குழுக்களும் அடங்கும்.

இவற்றில் 08 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், புதிய ஜனநாயக முன்னணி (கேஸ் சிலின்டர்), ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய பிரதான அணிகள் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், இம்முறை முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவில் இடம்பெறவில்லை.

அவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என, ஏனைய வேட்பாளர்கள் நான்கு பேர் – கட்டுக்கு கடுமையான அழுத்தங்களை விடுத்தமை காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.