தலைப்புச் செய்திகள்

அதாஉல்லா, முஷாரப் கேஸ் சிலின்டரில்: வேட்புமனுவில் கையெழுத்தும் இட்டாயிற்று

– மரைக்கார் –

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – அம்பாறை மாவட்டத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் ‘கேஸ் சிலின்டர்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அதற்கான வேட்புமனுவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கடந்த பொதுத் தேர்தலில் அவரின் தேசிய காங்கிரஸ் கட்சியின் ‘குதிரை’ச் சின்னத்தில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதனையடுத்து அவர் கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆதரவளித்த போதும், அவருக்கு எந்தவித பதவிகளும் அந்த ஆட்சியில் கிடைக்கவில்லை.

பின்னர் தனது அரசியல் வாழ்க்கை நெடுகிலும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்த ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அதாஉல்லா, அவரின் அரசாங்கத்தோடு இருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை அதாஉல்லா வெளிப்படுத்தினார்.

இந்த நிலையிலேயே தற்போது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கேஸ் சிலின்டர் சின்னத்தில் அதாஉல்லா போட்டியிடுகிறார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப்பும் கேஸ் சிலின்டரில் போட்டியிடுகிறார். அவரும் அதற்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.