
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவரை புதிய அரசாங்கம் – சட்டவிரோதமாக நியமித்தமையை தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயின் பதவிக்காலம் ஏறக்குறைய பத்து வருடங்கள் எஞ்சியுள்ள போதிலும், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு அவரை மாற்ற முயற்சித்துள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விடயத்தைக் கவனத்திற் கொண்ட தேர்தல் ஆணைக்குழு, அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம், இது தொடர்பான அறிக்கையினைக் கோரியுள்ளதோடு, புதிய நியமனத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
தற்போதைய நிர்வாகப் பணிப்பாளரை மீண்டும் பணியில் அமர்த்துவதோடு, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் இதுபோன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் குறிப்பிடத்தக்க நிர்வாக மாற்றங்களைத் தடைசெய்யும் தேர்தல் சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.



