தலைப்புச் செய்திகள்

‘இவர்களுக்கு’ தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்

ழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பு மனுவை வழங்க வேண்டாம் என – மார்ச் 12 இயக்கம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.

அந்த கட்சியின் இணைப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

உரிய வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் பட்டியலில் இணைத்தால், மக்களுக்குச் சிறந்த அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும். 

ஊழல், குற்றங்கள் மற்றும் சுற்றாடலுக்குத் தீங்கு விளைவித்தோர் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் அனுமதிக்கக் கூடாது. 

எனவே, அரசியல் கட்சிகள் தமது பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.