கெஹலிய மற்றும் குடும்பத்தினரின் 97.125 மில்லியன் ரூபாய் நிதியை மேலும் 03 மாதங்களுக்கு முடக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக 05 பேரின் 97.125 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16 நிலையான வங்கி வைப்புகள் மற்றும் ஆயுட்காப்புறுதிப் பத்திரங்களை மேலும் 03 மாதங்களை முடக்கி வைக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம்இன்று (04) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கெஹலிய மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக ஐந்து பேரின் நிலையான வங்கி வைப்புகள் மற்றும் காப்புறுதிப் பத்திரங்களை மூன்று மாதங்களுக்கு முடக்கி வைக்குமாறு ஜூலை 05 அன்று, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த மேல் நீதிமன்றம், எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி வரை, குறித்த நிதிகளை மேலும் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.