
கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் 241 பேர் எம்.பிகளாக பதவி வகித்துள்ளனர் என, நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
225 பேர அங்கம் வகிக்கும் நாடாளுமன்றில் 19 பேரின் நாடாளுமன்றப் பதவிகள் வெற்றிடமானமை காரணமாக – வேறு நபர்கள் நியமிக்கப்பட்டமையினால், இவ்வாறு 241 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகித்துள்ளனர்.
மேற்படி 19 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 08 பேர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர், இருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குரிய தகைமையை இழந்திருந்தனர், மூவர் – கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டனர், நால்வர் மரணமடைந்தனர், இருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த 19 பேரில் – ஹரின் பெனாண்டோவின் பதவி வெற்றிடத்துக்கு, எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



