
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி அதிக நாடாளுமன்ற உறுப்பினர் (19 பேர்) கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதேவேளை, குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவாகவுள்ளனர்.
மேலும், சுயேச்சைக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களையும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முழு விபரங்களையும் கீழேயுள்ள பட்டியலில் காணலாம்;




