
வர்த்தக மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (24) காலை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் சமூகமளித்திருந்தார்.
பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் இவர் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவாகியிருந்தார்.
ஏற்கனவே இவர் வர்த்தக ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த நிலையில், புதிதாக சுற்றாடல் ராஜாங்க அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவராகவும் வியாழேந்திரன் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



