அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு

🕔 June 23, 2024

ரச பாடசாலைகள் நாளை (24) திங்கட்கிழமை வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அரச பாடசாலைகளில் கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தீர்க்கப்படாத சம்பள முரண்பாடுகள் மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்கு முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பிரிவேணா ஆசிரியர்கள் – எதிர்வரும் புதன்கிழமை (26) ஒரு நாள் சுகயீன வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்