தலைப்புச் செய்திகள்

உடலுறவு கொண்ட நடிகையை அமைதிப்படுத்த, பணம் வழங்கிய வழக்கு; டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாசப் பட நடிகை ஒருவருக்கு உடலுறவு கொண்டுவிட்டு, அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பணம் கொடுத்தமை தொடர்பான வழக்கில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஸ்டார்மி டேனியல்ஸ் எனும் ஆபாச பட நடிகையை அமைதிப்படுத்துவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டொனால் டிரம்ப்பை  நிவ்யோக் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

தண்டனை பற்றிய விவரங்கள் எதிர்வரும் ஜுலை 11ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

குற்ற வழக்கு ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ விசாரிக்கப்படுவதும், குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவதும் அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனாலும் அதை டிரம்ப் மறுத்திருந்தார்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு முன்னர் – இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்க, தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியுள்ளார்.