
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடைய ‘மிதிகம ருவான்’ என்ற பாதாள உலக நபரான ருவன் ஜயசேகர கைது செய்யப்பட்டு, துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) குழுவினால் ‘மிதிகம ருவன்’ இன்று (31) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்டர்போல் உத்தரவின் அடிப்படையில் – இந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய் பொலிஸாரால் ‘மிதிகம ருவன்’ கைது செய்யப்பட்டார்.
அவர் பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நடுன் சிந்தகவின் உறவினர் என்றும், ஹரக் கட்டாவை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் இருந்து தப்பிச் செல்வதற்குத் திட்டமிட்டுச் செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



