ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு

🕔 June 9, 2023

நாட்டில் கடந்த 05 வருடங்களில் ஒவ்வொரு 05 பேரில் ஒருவா் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) நாடாளுமன்றத்தில் கூறினார்.

வாகன இறக்குமதியின் போது வரியை டொலரில் செலுத்துவதற்கான யோசனையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

2015 முதல் 2020 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும்.

அதன் விபரம் வருமாறு;

2015ஆம் ஆண்டு – 652,446 வாகனங்கள்

2016 ஆம் ஆண்டு – 466,986 வாகனங்கள்

2017ஆம் ஆண்டு – 448,320 வாகனங்கள்

2018ஆம் ஆண்டு – 496,282 வாகனங்கள்

2019ஆம் ஆண்டு – 332,452 வாகனங்கள்

2020ஆம் ஆண்டு – 102,228 வாகனங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்