கல்விக் கல்லூரி பட்டதாரிகளுக்கு 16ஆம் திகதி ஆசிரியர் நியமனங்கள்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 June 10, 2023

ல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கு, மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது என கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

2500 பேருக்கு மேற்படி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.

அதேவேளை, ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான நியமனக் கடிதங்கள் அந்தந்த மாகாண கல்விக் காரியாலயங்களில் வழங்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்