இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில்

🕔 May 5, 2023

ந்தியா – கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்டாலின் வருஷன் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மூட்டுவலி, வாதம், ஒற்றைத் தலைவலி, தண்டு சவ்வு விலகல் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவர் சிகிச்சை வழங்கவுள்ளார்.

இந்த வைத்திய முகாமில் சிசிச்சை பெற விருப்பமுள்ளோர் – நாளை சனிக்கிழமை வரை 0672052080 அல்லது 0776603366 எனும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டும், நேரடியாக வைத்தியசாலைக்குச் சமூகமளித்தும் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

முன்கூட்டி பெயர்களை பதிவு செய்வோர் மட்டுமே மேற்படி வைத்திய முகாமில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்