988 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

🕔 May 5, 2023

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 988 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் – நாட்டிலுள்ள சகல சிறைகளில் இருந்தும் 982 ஆண் கைதிகளும், குற்றச் செயல்களில் ஈடுபடாத 06 பெண் கைதிகளும் இன்று (05) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் நாளையும் கைதிகளை சென்று பார்வையிட குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்