எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம்

🕔 February 27, 2023

ரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள கிவ்ஆர் (QR) முறைமை இடைநிறுத்தபடவுள்ளதாக பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

கிவ்ஆர் (QR) முறைமையின் கீழ் எரிபொருட்களை வழங்கும் நடைமுறையை ஏப்ரல் 10 ஆம் திகதி தொடக்கம் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி – செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும், அந்த தகவலை மறுத்துள்ள அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் QR முறையை இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போதுள்டள எரிபொருள் ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க கிவ்ஆர் முறைமையிலான தரவு பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சகம் மற்றும் பிற தரப்பினருடன் கலந்தாலோசித்து இந்த அமைப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் ட்விட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தணிப்பதற்காக கடந்த ஆண்டு (2022) தேசிய எரிபொருள் கடவு (QR) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்