தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

🕔 February 27, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் பரிசீலிக்குமாறு – மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ் துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு இன்று (27) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவ்வாறு திகதி வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்