புகாரளி்த்தால் விசாரிக்கத் தயார்: லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 September 16, 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து புகாரளிக்கப்பட்டால், சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட லொஹான் ரத்வத்த நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.

அவர் மதுபோதையில் இருந்தபோது நண்பர்கள் குழுவுடன் வெலிக்கடை சிறை வளாகத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அனுராதபுரம் சிறையில் இரண்டு கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர; இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டால், இந்த சம்பவங்கள் குறித்து லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்க – தனது அமைச்சு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

சிறை வளாகங்களுக்குள் ஆயுதங்களைப் பயன்படுதியமைக்கு எதிராக அமைச்சு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர் பயன்படுத்திய துப்பாக்கி – அனுமதிப் பத்திரம் பெற்றதாகும். இருந்தபோதும், இந்த சம்பவங்கள் தொடர்பாக யாராவது புகாரளித்தால், சட்டப்படி நாங்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் அமைச்சர் வீரசேகர மேலும் கூறியுள்ளார்.

தொடர்பான செய்தி: சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்