சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார்

🕔 September 15, 2021

சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவியை லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார்.

ஆயினும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் தொடர்ந்தும் வகிப்பார் எனத் தெரியவருகிறது.

‘அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற ராஜாங்க ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் கைதிகள் இருவரை முழங்காலில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே, அவர் ராஜிநாமா செய்துள்ளார்.

ஆனாலும் அவர் ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான தொழிற்துறை ராஜாங்க அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிப்பார்.

இதேவேளை, லொஹான் ரத்வத்தையின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்பான செய்திகள்:

01) கைதிகளை கொலை செய்யப் போவதாக லொஹான் ரத்வத்தை மிரட்ய குற்றச்சாட்டு: பதவி விலக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

02) மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலையினுள் நுழைந்த அமைச்சர்: தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு தூஷணத்தால் ஏச்சு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்