மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலையினுள் நுழைந்த அமைச்சர்: தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு தூஷணத்தால் ஏச்சு

🕔 September 13, 2021

துபோதையில் இருந்த ராஜாங்க அமைச்சரொருவர் வெலிகடை சிறைச்சாலை வளாகத்தினுள் நேற்று (12) வலுக்கட்டாயமாக நுழைந்ததாக ‘தி மோனிங்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையினையும் தூக்கு தண்டனை வழங்கும் இடத்தினையும் தனது நண்பர்களுக்குக் காண்பிப்பதற்காக, மேற்படி ராஜாங்க அமைச்சர் அவ்வாறு வலுக்கட்டாயமாக நுழைந்தாதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் குடும்பமொன்றைச் சேர்ந்த இந்த அமைச்சர், சம்பவ நேரத்தில் கைத்துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை சாதாரண உடையில் அமைச்சருடன் வந்திருந்த அவரது நண்பர்களும் அப்போது போதையில் இருந்தனர் எனவும் கூறப்படுகிறது.

அமைச்சரின் நண்பர்கள் சிலர் – தரையில் விழுமளவுக்கு போதையில் இருந்ததாகவும், அவர்களை சிறைச்சாலை வளாகத்தினுள் நுழையவிடாமல் தடுப்பதற்கு முயற்சித்த சிறை அதிகாரிகளை, தூஷணத்தில் அவர்கள் ஏசியதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்