ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டலை எரித்தவர்கள் கைது

🕔 March 12, 2018

னமடுவ பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலை தீக்கிரையாக்கிய சம்பவத்துடன், தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசியதில், குறித்த ஹோட்டல் தீப்பற்றி எரிந்தது.

குறித்த ஹோட்டலுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி 07 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் அனைவரும் 19 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்