மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம்

🕔 February 22, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றுக்கு வருகை தந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறினார்.

ஜனாதிபதியின் வருமையை புறக்கணிக்கும் வகையிலேயே, பிரதமர் இவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாபதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளமை இந்த சம்பவம் வெறிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியதைத் தொடர்ந்து, ஐ.தே.கட்சியின் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரும்  சபையிலிருந்து வெளியேறினர்.

மறைந்த முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான விஷ்வ வர்ணபால மீதான அனுதாப பிரேரணையின் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி இன்று நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே, ஜனாதிபதி சபைக்கு வருகை தந்த நிலையில், பிரதமர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்