ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார்

🕔 February 22, 2018

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன, மார்ச் மாதத்துடன் அவரின் பதவிக் காலத்தை நிறைவுறுத்திக் கொள்ளவுள்ளார்.

இதனை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அமாரியின் பதவிக் காலம் ஓகஸ்ட் மாதம் வரையில் உள்ள நிலையிலேயே, மார்ச் மாதத்துடன், அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளார்.

இதனடிப்படையில் மார்ச் 31ஆம் திகதியுடன், பிரிதானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவியிலிருந்து அமாரி விலகிக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமாரி விஜேவர்த்தன தனது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, அந்தச் செய்திகளை நிராகரித்து, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்