தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மறியல் போராட்டம் நடத்தும் மாணவர்களை அகன்று செல்லுமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 December 29, 2017

– மப்றூக் –

தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தின் முன்பாக, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இடத்துக்கு வந்த அக்கரைப்பற்று பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை மாணவர்களுக்கு வாசித்துக் காட்டியதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுப்  பிரதியினையும் அங்கு ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

ஆயினும், இதுவரையில் (மாலை 6.30 மணி) மாணவர்கள் அங்கிருந்திருந்து அகன்று செல்லவில்லை என அறிய முடிகிறது.

இதனை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜிமும் உறுதிப்படுத்தினார்.

தொடர்பான செய்தி: மறியல் போராட்டம் நடத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நிருவாகத்துக்கு இடையூறு செய்வதாகவும் புகார் 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்