அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் வேட்பாளர்கள், தேர்தல் நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து கண்டனம்

🕔 December 29, 2017

–  முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களைப் பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில், சமூக அக்கறையாளர்கள் பாரிய கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரஸ் வேட்பாளர்களே, சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களை இவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டப்படுகிகிறது.

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில், காதிரியா வடக்கு வட்டாரத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை, இன்று வெள்ளிக்கிழமை சிறுவர்கள் இருவர் ஒட்டிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்தே, இவ்விடயம் குறித்து சமூக அக்கறையாளர்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

வேட்பாளர்களின் பிரசார சுவரொட்டிகளை பகிரங்க இடங்களில் ஒட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அவ்வாறானதொரு நிலையில், தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு சிறுவர்களை பயன்படுத்தியுள்ளமை கடும் தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்