ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது
🕔 January 27, 2017


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தினையும் எதிர்கொண்டுள்ளன.
குறிப்பாக, இன்று பெய்த மழையின் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் புதன்கிழமைக்கு முன்னர் மூன்று நாட்காளாகப் பெய்து வந்த தொடர் மழை தணிந்து, நேற்றும் நேற்று முன்தினமும் வெயிலுடனான காலநிலை நிலவியது.
இந்த நிலையில், கடந்த இரவு மீண்டும் கடும் மழை பொழிய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக, வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலையினை எதிர்நோக்கியுள்ளன.
தற்போதைய காலநிலை காரணமாக, பல பாடசாலைகள் இன்றைய தினம் இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்கிழமை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளிலேயே நாட்டில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. (படங்கள்: ஏ.எல். ஹிதாஸ் முகம்மட்)

Comments

