ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு
🕔 January 27, 2017
அரசாங்கத்திற்கு எதிரான, ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் தற்போது நுகேகொடையில் நடைபெற்று வருகின்றது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனும் பங்கேற்றுள்ளார்.
மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்குனும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது.
சீரற்ற காலநிலையிலும் மக்கள் கலந்து கொண்டுள்ள இந்த பொதுக்கூட்டத்தில், கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டம் காரணமாக நுகேகொட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.