வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர்
🕔 January 27, 2017


– க. கிஷாந்தன் –
வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இன்று வெள்ளிக்கிழமை 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு, காலி பிரதேசத்தை நோக்கி பயணித்தபோதே, குறித்த வேன் குயில்வத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டமையினாலேயே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினார்.
வாகனத்தின் சாரதியுடன் வெளிநாட்டு பிரஜைகள் இருவர், விபத்தின்போது பயணிதனர். ஆயினும், இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மலையகத்தில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுகின்றமையினால், வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்படுகிறது. எனவே, வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளரனர்.

Comments

