ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி
ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஹனீபா மபாஸ் (30 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில், மபாஸ் செலுத்தி வந்த செய்த வேன் மோதிமையினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மபாஸ் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறன்றது.
இதேவேளை, வேன் மற்றும் டிப்பர் வாகனம் ஆகியவை பொலிஸ் நிலையத்தில் தடுத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மபாஸின் மரணத்தையடுத்து வாழைச்சேனையிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் ஏற்றி துக்கம் அனுஷ்டிப்படுகிறது.